Skip to main content

எச்சரித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
kilinochi court




கடந்த வாரத்தினில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 ராமேஸ்வரம் மீனவர்களை கடுமையான எச்சரிக்கை விடுத்து, விடுவித்துள்ளது இலங்கையிலுள்ள கிளிநொச்சி நீதிமன்றம்.
 

கடந்த சனிக்கிழமையன்று ராமேஸ்வரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்றனர் மீனவர்கள். இதில் 11 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த காங்கேசன் கடற்படையினர் அவர்களை கைது செய்தததோடு மட்டுமல்லாமல், அவர்கள் கொண்டு வந்த விசைப்படகுகளையும் கைப்பற்றி கிளிநொச்சி நீதிமன்றத்தினில் ஒப்படைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு அதே நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்ட நிலையில், "இனிமேல் இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்தால் ஒவ்வொரு மீனவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் விதிக்கப்படும். மேலும் விசைபடகின் உரிமையாளர் வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும்." என கடுமையாக எச்சரித்து மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார் கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி. "மீன் பிடி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும்." என கோரிக்கை விடுத்துள்ளனர் மீனவர்கள். விடுதலை உத்தரவு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்