Skip to main content

மாமனாருக்கு காரியம் முடித்த கையோடு சுஜித் குடும்பத்தை பார்க்க வரும் எடப்பாடி பழனிசாமி!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

 

மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். கடந்த 80 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு அழுகிய நிலையில் பேரிடர் மேலாண்மை குழுவினர் குழந்தையின் உடலை மீட்டனர். இந்த மீட்பு பணியில் கடந்த 4 நாட்களாக துணைமுதல்வர், மற்றும் 3 அமைச்சர் உடன் இருந்து மேற்பார்வையிட்டனர். 

 

edappadi palanisamy


இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த 25ஆம் தேதி முதல் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள தனது இல்லத்துக்குச் சென்று தங்கியிருந்தார். 
 

இதே நேரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் 80 வயதான காளியண்ணன் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பில் கலமானார். 
 

மாமனார் இறந்த தகவல் அறிந்து தேவூருக்கு விரைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரவு 7.30 மணியளவில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு நேற்று காரியம் முடிந்த கையோடு பிரமரிடம் குழந்தை குறித்த பேசினேன் என்று அறிக்கை வெளியிட்டார். நள்ளிரவு குழந்தை அழுகிய நிலையில் எடுத்து கல்லரையில் அடக்கம் செய்தனர்.
 

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுஜித்தை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்த விதிகள் வகுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் போதிய வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.
 

இன்று சேலத்தில் இருந்து காரில் மாலை நான்கு மணிக்கு அமைச்சர்கள் புடைசூழ குழந்தை சுர்ஜித்தை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்திக்க வருகிறார்.
 

இதற்கு இடையில் மதியம் தமிழக எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சுர்ஜித் குடும்பத்தினரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்