Skip to main content

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை! அதிகாரிகளிடம் ஒப்படைத்த முஸ்லிம் பெரியவர்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
Statue



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிறது நாச்சிக்குளம். இங்கு முஸ்லீம்களும், தேவர்களும், தலித்துகளும் நிறைந்து வாழ்கிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள சிறுபனையூர் கிராமத்தில் கடந்த 4.08.18 ஆம் தேதி சாகுல் ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றிப் போனது. 
 

 

 

அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது. அதை பிரித்துப் பார்த்தப் போது அதில் ஐம்பொன் சிலை இருப்பது தெரிய வந்தது. உடனே சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். 
 

பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார். சிலை கடத்தல் பரபரப்புகள் உலா வரும் நிலையில், ஒரு முஸ்லீம் பெரியவர் சாமி சிலையை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் சாகுல்ஹமீதை பாராட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்