Skip to main content

வடமாநில இளைஞர் வெட்டிக் கொலை... குற்றவாளிகளுக்கு வலைவீச்சு...!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்துள்ள பணிக்கம்பாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது.  இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.  அவர்கள் அருகிலேயே பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து  தங்கியுள்ளனர். இதேபோல் ஒடிசா மாநிலம் குண்டாபாய் பகுதியை சேர்ந்த 30 வயது நாகேந்திரா பெகாரா, அதே மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நிரஞ்சன் பெஹார ஆகியோர் அந்தக் பனியன் கம்பெனிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்து  அங்கு வேலைக்கு செய்து வந்தனர்.

 

Erode incident - police investigation

 



நாகேந்திர பெகாராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த 4 பேரும் நேற்று இரவு  நாகேந்திர பெகாரா  தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர்.  பிறகு அந்த கும்பலுக்கும்  அவருக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  திடீரெனு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அருவாள் ,கத்தியால் நாகேந்திர பெகாராவை சரமாரியாக வெட்டினர்.  

இதில் அவருக்கு தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் விழுந்து உயிருக்காக்க போராடினார்.  அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிறகு பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

 



ஆம்புலன்ஸ் மூலம் நாகேந்திர பெகாராவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுழலில் சிக்கிய தம்பி-அண்ணன் கண் முன்னே நடந்த சோகம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024

 

 

Tragedy happened in front of the eyes; brother trapped in the whirlpool

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், டி.எம்.கல்யாண நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, சுர்ஜித் (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சுர்ஜித் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் குமாரபாளையத்தில் சினிமா பார்க்க கிளம்பிச் சென்றனர். காலை காட்சி பார்க்க முடியாததால் மதியம் காட்சி பார்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பவானி, லட்சுமி நகர், பவிஸ் பார்க் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க முடிவு செய்து சேலம் -கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் ராஜா மற்றும் சதீஷ் ஆகியோர் கத்தி கூச்சலிட்டனர்.இது குறித்து பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி சுர்ஜித்தை தேடினர். சிறிது நேரத்தில் சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண் முன்னே தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

குடிநீர் தொற்றால் 6 பேர் பலி; நீர்த் தேக்கத் தொட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Intensification of cleaning of overhead water reservoirs in Erode

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட  தலமலை மலைப்பகுதியில் தடசலப்பட்டி, இட்டரை, மாவ நத்தம் ஆகிய கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கடும் வயிற்றுப்போக்கு வாந்தியால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண் உள்பட மூன்று பேர் சிகிச்சை மூலம் வீடு திரும்பினர். 

தாளவாடி ஒன்றிய மலைப்பகுதியில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். இதில் அந்த கிராமத்திற்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் குழாய் பழுதால் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து மழையால் தேங்கிய குட்டைகளிலும், நீர் நிலைகளிலும் தண்ணீரை குடித்ததால் ஒவ்வாமை மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. 

இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரினேஷன் செய்து குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் பெயரில் ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தல் பேரில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள 64 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், 220 சின்டெக்ஸ் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தூய்மை செய்திடவும், ஒவ்வொரு முறையும் நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 225 கிராம ஊராட்சிகளிலும் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.