Skip to main content

திமுக தலைவராக ஓராண்டு நிறைவு... அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேட்டி!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

stalin interview

 

இந்த கூட்டத்தின் முடிவில் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவராக நானும், பொருளாளராக துரைமுருகனும் பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த ஓராண்டில் எங்களை ஊக்கப்படுத்திய ஊடகத்துறையை சேர்ந்த நீங்கள் எங்களை பாராட்டி, விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சித்து தெளிவோடு எடுத்து சொல்லி எங்களை ஊக்கப்படுத்தியதற்கு ஊடகங்களுக்கு நன்றி.

இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தோம் என்றார். 

இந்த ஓராண்டில் நீங்கள் சந்தித்த சோதனைகள் என்ன? என்ற கேள்விக்கு

நான் சாதனைகள், சோதனைகளை எல்லாம் எடைபோட்டு பார்ப்பதில்லை. கலைஞர் வழியில் சோதனைகளை துணிவோடு சந்திப்போம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்