Skip to main content

இன்று மாலை கூடுகிறது சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!!

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

 

 

 This evening is a special assembly meeting!

 

அண்மையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  

 

இதனையடுத்து  கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசிற்கும், கர்நாடக அரசிற்கும் கண்டனங்களை தெரிவித்தன. கடந்த நான்காம் தேதி திருச்சியில் திமுக தனது தோழமைகட்சிகளுடன் நடத்திய போராட்டத்தில், இதனை கண்டுகொள்ளாத தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். 

 

இந்நிலையில் நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் அணைக்கட்டும் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

சார்ந்த செய்திகள்