Published on 25/07/2019 | Edited on 25/07/2019
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இன்று 24 ந் தேதி காலை 7 மணிக்கு 143 விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
![Sri Lankan navy arrests Indian fishermen](http://image.nakkheeran.in/cdn/farfuture/FjOJwQQMH3-7tkQw_sIKNZa-gsfUBCHOQRCfZwW1lR8/1563993634/sites/default/files/inline-images/zzzzzzzzzzz_1.jpg)
இதில் முனிவேல் (55)ஜெகதாப்பட்டினம் என்பவருக்கு சொந்தமான INDTN06MM373 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் அவருடன் அதே ஊரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (31), மணிகண்டன் (28), குமார் (42) ஆகிய நான்கு மீனவர்களும் மாலை 5 மணிக்கு 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையின் தொடரும் மீனவர்கள் கைது தாக்குதல் சம்பவங்களால் மீனவர் குடும்பங்கள் கவலையில் உள்ளனர்.