திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு கடந்த மே 9-ஆம் தேதி கேரளாவிலிருந்து கன்னியாஸ்திரிகள் குழுவாக வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள் பைபிளை வாசித்ததாகவும் அவர்கள் வந்ததற்கு அடையாளமாக இரண்டு புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களிலும் அதிகமாக பரவிவந்தது. மேலும் கோவிலுக்கு வந்து கன்னியாஸ்திரிகள் பைபிளை வாசித்த செய்தி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் இதற்கு விளக்கமளித்துள்ளது. " கேரளாவிலிருந்து கன்னியாஸ்திரிகள் வந்தது உண்மைதான் ஆனால் அவர்கள் பைபிள் திறந்து வாசித்து பிரார்த்தனை செய்யவில்லை. வந்து சிறிது நேரத்திலே கன்னியாஸ்திரிகள் கிளம்பிவிட்டனர். ஆயிரம்கால் மண்டபத்திற்கு அனைத்து மதத்தினரும் வருகை தரலாம் அது சுற்றுலா பகுதியாகும். இதுபோன்ற செய்திகளை மக்கள் நம்பவேண்டாம்" என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.