பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் களம் இறங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் களமிறங்கப் போகிறாரா என்பதை அறிய தங்க தமிழ்ச்செல்வனிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆண்டிபட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மீண்டும் டிடிவி ஆசியோடு போட்டியிட இருக்கிறேன். அதன் மூலம் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெறுவேன். என்னை எதிர்த்து போட்டியிடும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் டெபாசிட் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு என் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்.
குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி வந்த ஓபிஎஸ் இப்ப குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். நேற்று பெய்த மழையில் முலைத்த காளான் மாதிரி திடீரென அரசியலுக்கு வந்த ஓபிஎஸ் மகன் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிடுவேன். கட்சிக்காக உழைத்து இருக்கிறேன் என பேட்டி கொடுத்து வருகிறார். இந்த ஓபிஎஸ் மகன் கட்சியை வளர்ப்பதற்காக எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருப்பார். எந்தெந்த போராட்டத்தில் கலந்து இருப்பார் என்று சொல்ல முடியுமா தொகுதியில் கட்சிக்காக உழைத்த ஜெயிலுக்கு போனவர்களை எல்லாம் மறந்துவிட்டு ஓரங்கட்டிவிட்டு மகனுக்கு சீட் கொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்திருக்கிறார்.
ஓபிஎஸ் பதவி மூலம் அவர் அவருடைய மகன் அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டு வந்தாரே தவிர தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் எத்தனை ஊர்களுக்கு சென்று இருப்பார் என்று சொல்ல முடியுமா அதுபோல் பொதுமக்களுக்கும். கட்சிக்காரர்களுக்கும் என்னென்ன உதவிகள் செய்து இருப்பார் என்று சொல்ல முடியுமா ஓபிஎஸ் பெயரை சொல்லி பகுமானமாத்க தான் அவருடைய மகன் தொகுதியில் வலம் வருகிறார். அதுனால ஓபிஎஸ்சின் குடும்ப அரசியலும் இந்த தேர்தலில் தோற்றுப் போகும் என்று கூறினார்.