Published on 06/05/2020 | Edited on 06/05/2020

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பிறமாநில தொழிலாளர்களை அவரவர் மாநிலத்துக்கு அனுப்பிவைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கவும் அனுமதி தந்தது மத்திய அரசு.
அதன்படி தமிழகத்தில் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களை ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வைத்திருந்தது. அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியவர்கள் பற்றிய பட்டியல் எடுத்தது. அதன்படி 1,136 பேர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாக கூறினர்.
அதனைத் தொடர்ந்து காட்பாடி இரயில்வே நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் மே 6ந்தேதி இரவு 10 மணிக்கு காட்பாடியில் இருந்து ஜார்கண்ட் மாநில தலைநகரம் ராஞ்சிக்கு புறப்படுகிறது.