தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை, காலை 9 மணிக்கு தொடங்கியது.
நிருபர்கள், கேமரா மேன்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அங்கிருக்கும் நிருபர்கள் கூறுகையில், எங்களை தனியாக அறை கொடுத்து அமரவைத்தனர். வீடியோ கேமராக்கள் இரண்டு நிமிடம், போட்டோக்கிராப்பர்கள் இரண்டு நிமிடம் மட்டுமே படம் எடுக்க அனுமதித்தனர். நிருபர்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டிவிட்டு வெளியே அழைத்து வந்தனர். 3 மணி நேரமாகியும் தபால் வாக்கு எண்ணிக்கை விவரம் தெரிவிக்கப்படவில்லை. எந்த நிலவரமும் தெரியாததால் நிருபர்கள் உள்ளனர்.
நாங்க என்ன டிபன் சாப்பிடவும், டீ குடிக்கவுமா வந்தோம். லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரியில் எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளேவிட தான் பாஸ் கொடுத்துள்ளார்கள். இந்த பாஸ் கொடுத்திருக்கிறார்கள் என காட்டினாலும் அனுமதிக்கவில்லை. அடையாறு துணை கமிசனர் பத்திரிகையார்களை சமாதானப்படுத்தி அனுப்புகிறார். எப்படி போராடினாலும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஏ.பி.ஆர்.ஓ. அலுவலர்தான் நான்கு சுற்று முடிவு என ஜெராக்ஸ் காப்பியை கொடுக்கிறார். மேலும் வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தநிலையில் செல்கிறது எனவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.