![The son who buried his dead father in the house](http://image.nakkheeran.in/cdn/farfuture/ELl19aaeWTtX-nB9jcgHR0JePZGh0XoBG7-WSKZk1qk/1598951421/sites/default/files/inline-images/death_3.jpg)
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ளது களாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி வயது 65. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து போயிருந்தார். இவரது உடலை அவரது வீட்டுக்கு அருகிலேயே அவரது மகன் பாலசுப்பிரமணியன் புதைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதையறிந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் பாலசுப்பிரமணியன் தனது தந்தையின் உடலை வீட்டுக்குள்ளேயே இரவோடு இரவாக புதைத்துள்ளார். ஊருக்கு மத்தியில் உள்ள அவரது வீட்டுக்குள் இறந்து போன அவரது தந்தையின் உடலை புதைத்தது கண்டு கோபமுற்ற ஊர் மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் களரம்பட்டி மங்கூன் அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.