சினிமாவில் ஒரு வரும் வசனம் யாரையோ குறிப்பிடுவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அந்த வசனத்தை நீக்கியே ஆகவேண்டும் என்று போர்க்குடி தூக்கினார்கள் ஒரு கட்சியினர். இந்தநிலையில், "நல்ல கருத்துதான்.." என்று அவ்வசனத்தை வரவேற்பதாக பொதுவெளியில் பேசிவிட்டது ஒரு அரசியல் பிரபலம்.
ஏற்கனவே, அந்தப் பிரபலம் ஒரு பெண்ணுடன் பேசிய விவகாரமான ஆடியோ ஒன்றை வெளியிட்டு, அவரது ரகசிய உறவு குறித்தும் வெளியுலகத்துக்குத் தெரியாத குழந்தை பற்றிய விவரத்தையும் தகவலாகக் கசியவிட்டனர் அந்தக் கட்சியினர். ‘இவர்தான் தந்தை’ என, அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழெல்லாம் அப்போது ‘லீக்’ ஆனது. ‘இந்த அளவுக்குச் சும்மா கிழி கிழியென்று கிழித்தும், அடங்கவில்லையே அந்தப் பிரபலம்? கருத்து வெளியிட்டு தங்களின் மரியாதைக்குரியவரைச் சீண்டுகிறாரே?’ என்ற கடும் கோபத்தில் அந்தக் கட்சியின் ஐ.டி. விங், முகம் தெரியாத பெண்ணின் மடியில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையின் படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டு, ‘குட்டிப்பையன் யாருன்னு தெரியுதா? முகச்சாயலை வைத்துக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!’ என்று புதிர் போட்டுள்ளது.
அந்த போட்டோவைப் பார்த்துவிட்டு, ‘சான்ஸே இல்ல.. சத்தியமா இது மீன் குஞ்சுதான்..’ என்று கமென்ட் போட்டு வருகிறார்கள் குறும்புக்கார நெட்டிசன்கள். ‘நீ சீண்டினால் நாங்கள் பிராண்டுவோம்..’ என ரோட்டோரம் வரச் சொன்ன மேட்டரை வைத்து, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அந்தப் பிரபலத்தைச் சந்தி சிரிக்க ..வைப்பார்களோ?