Skip to main content

“பெட்டிசன கைல தானே எழுதுற...” - மணல் கடத்தலுக்கு எதிராக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

Social activist who complained about sand  was threatened

 

சென்னை மாதவரம் அருகே மணல் கொள்ளை நடந்ததாக காவல் துறையில் புகார் அளித்த சமூக ஆர்வலர் நாகராஜ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

 

பெரிய பாளையம் அருகே மண்வாசல் பகுதியில் உள்ள மணல் குவாரியில் விதிகளை மீறி சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கும் காவல்துறைக்கும் சமூக ஆர்வலர் நாகராஜ் புகார் அளித்தார். 

 

புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் பாதிப்புக்குள்ளான மணல் குவாரியை சேர்ந்த நடராஜ் என்பவர் சமூக ஆர்வலர் நாகராஜை தொலைபேசியில் அழைத்து மிரட்டிய ஆடியோ வெளியானது. 

 

அந்த ஆடியோ பதிவில், “நா வந்ததுக்கு அப்புறம் பாரு. உயிர் போச்சுனா ஈசியா செத்துருவ நீ. பெட்டிசன் கைலதான எழுதுற. நீ பாரு. நீ மட்டும் பேக் வாங்குனா உன்ன கொண்ணே புடுவேன். தெரியாம பண்ணிட்டேன். இனிமே பண்ண மாட்டேன் அப்படினு சொல்லி வாங்குன. இப்போ நீ எல்லாத்துக்கும் துணிஞ்சு பேசிட்ட. அதே மாதிரி இருக்கனும்” என சமூக ஆர்வலர் நாகராஜை நடராஜன் மிரட்டிய ஆடியோ பதிவு வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்