Skip to main content

’என் கட்-அவுட்டுக்கு பால் பாக்கெட் பத்தாது அண்டாவில் கொண்டு வந்து பால் ஊற்றுங்கள்’ - பல்டி அடித்த சிம்பு

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
si

 

’’நான் நடித்த  வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியாகும்போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர், கட் -அவுட் வையுங்கள்.  கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊற்றுங்கள்.  வேற லெவலில் செய்யுங்க.’’என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த வாரம் அவர் வெளியிட்ட வீடியோவில் தனது பட ரிலீசின் போது கட் -அவுட், பேனர் வேண்டாம் என்று கூறியவர் ஏன் இப்படி மாற்றி பேசுகிறார்?

 

தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட்களை வைக்கிறீர்கள்.   ஆனால் இந்த ஒரு முறை மட்டும் பிளக்ஸ், கட் அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்" என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டு வீடியோவை வெளியிட்டார் சிம்பு.  இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பெற்றது.

 

இந்நிலையில், மீண்டும் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை என்று தனது பட ரிலீசின்போது கட் அவுட் வைத்து அண்டாவில் கொண்டு வந்து பால் ஊற்றுங்கள் என்று சொன்னதற்கும் அவர் தனது வீடியோவில்,  ஏற்கனவே வெளியிட்ட வீடியோ குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.   எனக்கு ரசிகர்களே இல்லை எனவும்,  ரசிகர்களே இல்லாத போது எதற்கு வேண்டுகோள் என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.  எனக்கு 2,3 பேர்தான் ரசிகர்கள் இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.  விமர்சனம் செய்தவர்களுக்காக பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்ற வேண்டும் என்று அந்த 2,3 ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.  3 ரசிகர்கள்தானே இருக்கிறார்கள்.  அதனால் ஒன்று பிரச்சனை வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்