மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வேளாங்கண்ணியில் சர்வ கட்சியினர் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இறங்கல் தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரிவாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் நாகை அடுத்த வேளாங்கண்ணியில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. வேளாங்கண்ணியில் ஆர்ச்சில் இருந்து தொடங்கிய பேரணியானது கடற்கரையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பாஜக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வேளாங்கண்ணியில் கடைகளை அடைத்து தங்களது துக்கத்தை அனுசரித்தனர்