
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும், நகராட்சியில் தனியார் துப்புரவு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கூடாது, பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி ஊழியர்கள் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேபோல் பாசிக்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் தவறாமல் சம்பளம், நிலுவை சம்பளம், தினக்கூலி ஊழியர்கள் பணிநிரந்தரம், பாசிக் நிறுவனத்திற்கு முழு நேர மேலான் இயக்குநரை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி தலமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.