Skip to main content

பெண்ணை தாக்கிய தீட்சிதர்... சஸ்பெண்ட் செய்த கோவில் நிர்வாகம்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தை சேர்ந்த லதா (51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி இரவு மகன் பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு வழிபடச் சென்றபோது, அங்கிருந்த தர்ஷன் என்கிற நடராஜ கோயிலின்  தீட்சிதர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்தார். 

chidambaram temple dikshitar suspend administration suspends action

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் காவல்துறையினர் அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தீட்சிதரை தேடி வருகின்றன. இந்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நிர்வாக அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகணேசன் சம்மந்தப்பட்ட தீட்சிதர் தர்ஷனை இரண்டு மாதம் கோவிலில் பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு கண்துடைப்பாக உள்ளது என்று கூறுகிறார்கள்.



 

 

சார்ந்த செய்திகள்