Published on 27/12/2019 | Edited on 27/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன.

ஊரகப் பகுதிகளில் இன்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காலை முதல் மக்கள் அர்வத்துடன் வந்து தங்கள் வாக்கை செலுத்தினார்கள். அந்தவகையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிகவும் அமைதியான முறையில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து வருகிறது. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என செங்கோட்டையன் கூறினார்.