கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் உள்ள காரிய பெருமாள் கோவில் தெரு, சுப்பிரமணியன் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள குடிநீர் குழாயில் முடைநாற்ற மெடுக்கும் சாக்கடை நீர் வந்தது. இதனையறிந்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் பாதளசாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்து முறைக்கு மேல் காரியபெருமாள் கோவில் தெரு சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக மீண்டும் மீண்டும் பள்ளம் தோண்டினர். தோண்டிய பள்ளத்தை அலட்சியமாக மூடியதால் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. தோண்டிய பள்ளத்தால் சாலைகள் மிகவும் மோசமானதாக உள்ளது. குடிநீரில் சாக்கடை கலந்து வருவது அதிர்ச்சியை பயத்தையும் உண்டாக்குவதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மேலும்,சிதம்பரம் நகராட்சியில் குடிநீரே வராத காலத்தில் கூட குடிநீர் வரி வசூலித்து இருக்கின்றார்கள். ஆனால் இதுவரை சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியது இல்லை.
இப்படி சாக்கடை கலந்து வரும் குடி நீரால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நிலை சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.