திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை மகப்பேறியல் துறைத்தலைவர் பேராசிரியை பூவதி ஸ்ரீீீஜெயந்தன் 27.01.2020 காலையில் நடந்த வீடியோ கான்பரசிங் போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷின் சில கேள்விகள் மன உளைச்சல் அடைந்து தீடீர் என மேடம் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் இருந்து திடீரென வெளியேறினார்.

சிறந்த நேர்மையான மகப்பேறு பேராசிரியை பணியை மிகச் சரியாக செய்பவர் என்று அறியப்பட்ட பூவதியின் இந்த செயல் அரசு மருத்துவர்கள் வெளியே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியை மருத்துவர் பூவதி வாட்ஸ்அப் பதிவு செய்தது இன்னும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
அதன் தமிழாக்கம்.
"எனது வருத்தத்தை இங்கே வெளிப்படுத்த விரும்பவில்லை. நான் செய்த வேலையை விளக்க விரும்பவில்லை. டெர்மினல் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கும், நிர்வாகத்திலிருந்து செய்யப்படும் விஷயங்களை நிறைவேற்றுவதற்கும் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நான் அனுபவித்த மன அழுத்தத்திற்கு நிச்சயமாக எனது ஆயுட்காலம் குறைகிறது.
இப்போதெல்லாம் வலுவான சங்கத்துடன் இருக்கும் பணியாளர், செவிலியர்களிடமிருந்து வேலையைப் பெறுவது மிகவும் கடினம். இன்று வி.சி.யில் விவாதிக்கப்பட்ட ஒரு மரணத்திற்கு என் பங்கில் அலட்சியம் இல்லை. என் மீது குற்றம்சாட்ட எங்கள் மதிப்பிற்குரிய எச்.எஸ் மேடமின் அறிவுறுத்தல்களுக்காக நான் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளேன்.

திறந்த மன்றத்தில் இது எனக்கு கிடைத்த வெகுமதி என்றால், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. ஒரு அரசு ஊழியரைக் காட்டிலும் எனது சொந்த சுயமரியாதை மற்றும் சுயமரியாதை எனக்கு உண்டு. குறைந்த பட்சம் என்னை வி.ஆர்.எஸ்ஸில் செல்ல அனுமதிக்கவும். இனிமேல் சேவையில் தொடர முடியாது. யாரும் குற்றம்சாட்டப்படக் கூடாது.
இதுபோன்ற மோசமான தருணங்களை எதிர்கொள்வதும் எனது தவறான செயல். கடவுள் பதிலளிப்பார்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
HOD OBG (தற்போது)
திருச்சி மருத்துவக் கல்லூரி.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலரிடம் பேசியபோது ,
இந்த வீடியோ கான்பரன்சிங் வாரம் தோறும் நடக்கும். வாரந்தோறும் அரசு டாக்டர்கள் யாரையாவது சஸ்பெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர் .
ஒரு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை, அவர்களின் மரணம் தொடர்பான அவர்களது மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் கேட்க வேண்டும். அவரிடம் தான் இந்த தகவல் இருக்கும் இதை மருத்துவ கல்லூரியில் உள்ள துறைத் தலைவரிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள்.
இது சம்பந்தம் இல்லாத கேள்வி ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் அவசர காலத்தில் நேரடியாக போய் சிகிச்சை செய்வது இத்துடன் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்துவது தான் துறைத் தலைவரின் பணி. இது தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள முடியாது.

சுகாதாரத்துறை இணை துணை இயக்குனரிடம் கேட்க வேண்டிய கேள்வியை துறைத் தலைவரிடம் கேட்டு நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தால் வேறு என்ன செய்யமுடியும் அதனால்தான் பேராசிரியை பூவதி ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து எழுந்து சென்றார்.
இது தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தமே இல்லாத துறைகளின் விளக்கம் கேட்கும் சஸ்பெண்ட் செய்வதில் குடைச்சல் கொடுப்பது பலரும் அரசு பணியை விட்டு விலகும் மனநிலையில் உள்ளனர்.
ஏற்கனவே பல மருத்துவ கல்லூரிகளுக்கு போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லை என்ற நிலையில் தற்போது பேராசிரியர்களை விரட்டும் மனநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் சங்கத்தினர்.