Published on 25/05/2019 | Edited on 25/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் வெற்றிபெற்ற எம்பிகளுடன் திமுக தலைவர் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்குபெற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, பழனிவேல் தியாகராஜன், ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.