Skip to main content

பள்ளி மாணவியின் உயிரைப் பறித்த 'உருவகேலி?'-உறவினர்கள் போராட்டம்

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

A school girl's life was taken away -relatives struggle

பள்ளி கழிவறையில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த வித்யாஸ்ரீ என்பவரின் மகள் கடலூர் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று மாணவி பள்ளிக்கு செல்லாத நிலையில் விடுதியின் கழிவறை பகுதியில் அவர் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியின் உடலானது விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதியில் உணவு சரியில்லை என மாணவி தெரிவித்ததால்  மாணவியை விடுதி வார்டன் திட்டியதாகவும், மேலும் தன்னுடைய மகளை திருநங்கை என்று கூறிய அவமானப்படுத்தியதால் தன்னுடைய மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாவும், இதனால் சம்பந்தப்பட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றச்சாட்டு தெரிவித்து கதறி அழுதார். விடுதி வார்டன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்