Skip to main content

சிறையில் பயங்கரவாதிகள் இருவர் மோதல்; உறவினர்களைச் சந்திக்க தடை

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

 

salem prisoners incident nia and police investigation

 

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி காவல்துறை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் என்பவர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர். மேலும், வில்சனை கத்தியாலும் 6 இடங்களில் குத்தியுள்ளனர். 

 

அடுத்த 5 மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறைக்கே சவால் விடுவது போல் இருந்தது. 

 

விசாரணையில், அப்துல் சமீம் (வயது 32), தவுபிக் (வயது 28) ஆகிய இருவர்தான் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கர்நாடகா மாநிலம், உடுப்பியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.  இவர்கள் இருவரும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மாநிலக் காவல்துறை மட்டுமின்றி என்.ஐ.ஏ. காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டமும் பாய்ந்தது.

 

salem prisoners incident nia and police investigation

 

தற்போது அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில், உயர் பாதுகாப்புப் பிரிவில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நவ. 15 ஆம் தேதி இரவு அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை அறையில் இருந்து திறந்து விடப்பட்ட அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தினர். 

 

சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார். இருவரையும் எச்சரிக்கை செய்ததோடு, அவர்களை நேருக்கு நேராக உள்ள அறைகளில் இருந்து அப்புறப்படுத்தி, இருவரும் சந்தித்துக் கொள்ளாத வகையில் பின்பக்கமான அறைகளுக்கு இடமாற்றம் செய்தார். மேலும், சிறைக்குள் நடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் உறவினர்களைச் சந்திக்க 3 மாதங்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.