Published on 25/10/2019 | Edited on 25/10/2019
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 47,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் வினாடிக்கு 350 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.79 டிஎம்சியாக இருக்கிறது.