Published on 02/03/2020 | Edited on 02/03/2020
கர்நாடக அணைகளில் காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 183 கனஅடியிலிருந்து 1,607 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 105.17 அடியாகவும், நீர் இருப்பு 71.66 டிஎம்சியாக உள்ளது.

கபினி அணையில் 1,700 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் 3,725 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் தமிழகத்துக்கான ஜனவரி, பிப்ரவரி மாத பங்கான 5 டிஎம்சி நீரை திறந்துள்ளது கர்நாடகா குறிப்பிடத்தக்கது.