வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்டைத் தடுப்புக் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் தமிழக அரசு சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 15 ஆயிரத்து 625 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு வேட்டைத் தடுப்பு காவலர்களுக்குச் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.