Skip to main content

 மாணவி அலினாவுக்கு 2 லட்சம் இழப்பீடு!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

 

lady

 

திருவண்ணாமலை நகருக்கு ஆன்மீக பயணமாக வந்த மாணவி அலினா. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த விடுதியில் விடுதி உரிமையாளர் பாரதி உட்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றினர். 


இது தொடர்பாக பதியப்பட்ட வழங்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் அலினா, நடந்தது பற்றி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.


மருத்துவமனையில் இருந்த அலினாவை, மாவட்ட நீதிபதியும் – சட்டப்பணிகள் குழு தலைவருமான மகிழேந்தி அலினாவை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு காவல்துறை மூலம் இழப்பீடு வழங்கும் சட்டப்பிரிவின் கீழ் காம கொடூரர்களால் பாதிக்கப்பட்ட அலினாவிற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சட்டப்படியான பணிகள் நடைபெற்றன. அதன்படி, கடந்த ஜீலை 27ந்தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, அலினாவின் தாயார் எம்மா ரோமாவிடம், 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.


வரும் வாரத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு தனது தாய்நாடான ரஷ்யாவுக்கு புறப்பட முடிவு செய்துள்ளார் அலினா. இதற்கான பயணச்சீட்டு பெறும் பணிகள் அனைத்தும் முடிவுற்றதாக கூறப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்