Published on 18/12/2024 | Edited on 18/12/2024
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது.அதே சமயம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கன்துறை பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மூன்று பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விரைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.