“திராவிடத்திற்கு மாற்றுச்சிந்தனை வந்தால்தான் தமிழகம் உருப்படும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேனியில் பத்திரிகையாளரிடம் பேசிய கிருஷ்ணசாமி, “தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேறுவதால் எந்த சமூகத்திற்கும் பாதிப்பு இல்லை. எந்த முன்னுரிமை, கருணையும் வேண்டாம். எல்லோருக்கும் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அது போதும். சிறப்பு சலுகை தேவையில்லை. தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக போராடுவது சமூகத்தின் குரலாக இல்லை, அரசியல் தூண்டுதலாக கருதுகிறேன்.
இடஒதுக்கீடு மட்டும் சமூகநீதியாக முடியாது. திராவிட கட்சிகளின் சிந்தனையில் பிழை உள்ளது. திராவிடர்களை ஏன் ஆதி திராவிடர்களாகப் பிரித்தார்கள். 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் எங்களுக்காக என்ன செய்தார்கள். பழைய புராணத்தைப் பாடுகிறார்கள். திராவிடத்திற்கு மாற்றுச் சிந்தனை வந்தால்தான் தமிழகம் உருப்படும். கோரிக்கை நிறைவேறிய பின்தான் சட்டசபை தேர்தல் குறித்து சிந்தனை செய்வோம்” என்று கூறினார். பேட்டியின்போது மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர் பலர் உடன் இருந்தனர்.