பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் மூலம் கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு 21 சதவிகிதம் வருமானம் கிடைத்துள்ளது. டாஸ்மாக்கிற்கு அடுத்தப்படியாக பத்திரப்பதிவில்தான் அரசுக்கு அதிக வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் முத்திரைத்தாள் வரி மற்றும் பத்திரப்பதிவில் அதிக கட்டணம் வசூலிப்பதில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. பீகார் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அசாம் கடைசி இடத்தில் உள்ளது.
அம்மாநிலத்தில் 16 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேரளா மற்றும் புதுச்சேரியில் 10 சதவிகிதமும், ம.பியில் 9.5 சதவிகிதமும், ஆந்திராவில் 7 சதவிகிதமும், கர்நாடகாவில் 6.6 சதவிகிதமும், தெலுங்கானாவில் 6 சதவிகிதமும், அசாம், ஒடிசா, இமாச்சலபிரதேச மாநிலங்களில் 5 சதவிகிதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேற்கண்ட புள்ளி விபரங்கள் தமிழ்நாடு சட்டமன்ற விவாதத்தில் தெரியவந்துள்ளது.