Skip to main content

வெளியே வரவே பயமா இருக்கு... ஈரோட்டில் ஏன் இத்தனை பேருக்குக் கரோனா பரவியது? அதிர வைத்த தகவல்!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி (கரோனா சிறப்பு) மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 84 நபர்களில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு தாய்லாந்து நபர்கள், 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் லேடி டாக்டர் உட்பட நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவுதலுக்குச் சம்பந்தப்பட்ட நபர்களின் மூன்று நிகழ்வுகள்.

ஒன்று: 

மார்ச் மாத முதல் வாரத்தில் ஈரோடு இஸ்லாமியர்கள் 40 பேர் டெல்லியில் உள்ள மசூதிக்குச் சென்று மத நெறிமுறைகள் பயிற்சியில் சில நாட்கள் கலந்து கொண்ட பிறகு ஈரோடு திரும்பினார்கள். அந்த 40 பேரில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

issues



இரண்டு : 

மத மார்க்கம், வகுப்பு எடுக்க தாய்லாந்திலிருந்து டெல்லி வந்த இஸ்லாமிய குழுவான தப்லிக் குழுவினர் 7 பேர் டெல்லியிலிருந்து மார்ச் 11ந் தேதி ஈரோடு வந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான் பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கினார்கள். அதில் இரண்டு பேர் திரும்ப தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையம் சென்ற போதுதான் அவர்கள் பரிசோதனை செய்யப்பட, காய்ச்சல் உறுதியானது. அதில் ஒரு நபர் இறந்து விட்டார். மீதி இருந்த ஒரு நபருடன் ஈரோட்டில் தங்கியிருந்த எஞ்சிய ஐந்து தாய்லாந்து நபர்கள் என 6 பேர் பெருந்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அதில் இருவருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி எனக் கண்டுபிக்கப்பட்டது. இந்தத் தாய்லாந்து நபர்களுக்கு உதவி செய்தது, வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு போட்டது என நெருக்கமான தொடர்பில் இருந்த 84 பேரைப் பெருந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர் அதில் தான் ஈரோட்டைச் சேர்ந்த 8 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.


மூன்று : 

ஈரோடு ரயில்வே காலனி ரயில்வே நிர்வாக மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்தவர் அந்த லேடி டாக்டர். கோவையிலிருந்த தனது வீட்டிலிருந்து தினமும் ரயில் மூலம் ஈரோடு வந்து சென்றுள்ளார். இவரது பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம். சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்று வந்துள்ளார். அங்கு இவருக்கு ஏற்பட்ட தொற்று இவர் மூலம் இவரது கணவர், குழந்தை மற்றும் வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர் என நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நால்வரும் தற்போது கோவை அரசு மருத்துவ மனையில் உள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்