
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் வனப்பகுதியை சுற்றியுள்ள ஊர்களின் புகுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் கோடைகாலம் நெருங்கி வருவதால் மீண்டும் கூடலூர் வாகனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அடிக்கடி உலா வரும் 'மாக்னா' யானை அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரேஷன் கடை ஒற்றை உடைத்துவிட்டு தொரப்பள்ளி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை தாண்டி 'மாக்னா' யானை பீடு நடைபோட்டு நடந்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் நடந்து சென்ற யானையை ஆபத்தை உணராமல் அருகேயே நின்று படம்பிடித்த நபரிடம் மற்றொருவர் இந்த யானை என்ன யானை என கேட்க, 'ஹ்ம்ம் மக்னா யானைன்னு சொல்றாங்க' என கூலாக பேசிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிறக்கும்போதே மரபணு குறைபாடு ஏற்பட்டு தந்தங்கள் வளராமல் இருக்கும் ஆசிய ஆண் யானைகள் 'மாக்னா' யானை என அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.