Skip to main content

கடலுக்குள் தங்கம்...ஜிபிஎஸ் மூலம் அடையாளம்... கடத்தல்காரர்களின் புது டெக்னிக்!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

கள்ளன் பெரிதா..? காப்பான் பெரிதா..? என்ற வழக்கு மொழி இன்று வரை கிராமங்களில் உண்டு. அந்த வழக்கு மொழிக்கு புதிய வரைவிலக்கணத்தைக் கொடுத்துள்ளனர் கடத்தல்காரர்களும், வருவாய் புலனாய்வு பிரிவினரும்.!

  
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் தீவிற்கு கடத்தல் தங்கம் கொண்டு வருவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு டீமிற்கு தகவல் கிடைக்க, மண்டபம் கடலோரக் காவல்படை உதவியுடன் மன்னார்வளைகுடா பகுதியில் சோதனையைப் பலப்படுத்தினர். 

rameshwaram fishermens ilegal activities police seizured gold

இந்நிலையில் இலங்கையிலிருந்து வந்த நாட்டுப்படகு ஒன்று இந்த டீமிடம் சிக்கிக்கொள்ள, அந்தப் படகிலிருந்த மீனவர்களை முறைப்படி விசாரிக்க, தங்கம் கடத்தலில் ஈடுப்பட்டது உண்மை தான். தங்களைப் பார்த்ததும் "முயல்தீவு" அருகில் தங்கக் கட்டிகளை கடலுக்குள் போட்டுவிட்டோம்." என சர்வ சாதாரணமாக கூற, சற்றே மிரண்டுவிட்டது வருவாய் புலனாய்வு பிரிவும், கடலோரக் காவல்படையும்.! இருப்பினும், விடாமல் தொடர்ந்து விசாரிக்க, "அங்கே தான் போட்டோம். 

rameshwaram fishermens ilegal activities police seizured gold

அதற்கு அடையாளமாய் ஜிபிஎஸ் கருவி இருக்கு. "என உளற, கடத்தலில் ஈடுப்பட்ட மீனவர்களை ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் அப்பகுதிக்கு கூட்டி சென்று அடையாளம் பெறப்பட்ட வேளையில், கடலுக்குள் இறங்கி 5 பார்சலில் இருந்த 14 கிலோ தங்கத்தை மீட்டனர். தொடர் விசாரணையில் கடத்தலின் சூத்ரதாரியான மரைக்காயர்பட்டிணம் ஆசிக் மற்றும் புகாரி இருவரும் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரர்களின் புது டெக்னிக்கால் கடலோரத்தினைப் பலப்படுத்தும் அத்தனை உளவுப் பிரிவுகளும் வாய் பிளந்து வேடிக்கை பார்க்கின்றனர் என்பதே உண்மை.!


 

சார்ந்த செய்திகள்