Skip to main content

போலீசாருடன் வாக்குவாதம்! - அடையாறு கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் மாயம்!

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
koovam


அடையாறு கூவம் ஆற்றில் நள்ளிரவில் குதித்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடையாறு கூவம் அருகில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் அங்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததுள்ளார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது, அந்த இளைஞர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குபின் முரனாக பதிலளித்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என போலீசார் சோதனை செய்துள்ளனர்.

 

 

அதில் அவர் மது மதுஅருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரின் இருசக்கரத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர் இருசக்கரத்தை தருமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வண்டியை தராவிட்டால் கூவத்தில் குதித்து விடுவதாக இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், போலீசார் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் அடையாறு கூவம் ஆற்றில் குதித்துள்ளார். இதனால், பதறிப்போன போலீசார் இளைஞர் கரை சேருகிறாரா என்பதை கண்கானித்து வந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த இளைஞர் கரை சேராததால், தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடிய விடிய தேடியும் அந்த இளைஞர் கிடைக்காததால், அவரது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்று இடம் வெகு தொலைவில் இருப்பதாகக் கூறி மக்கள் கூவத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்...! (படங்கள்)

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 


சென்னை தீவுத்திடல் அருகே உள்ள எஸ்.எம் நகர் கூவம் பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கூவத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். கூவம் ஆறு சீரமைப்பக்கவும் ஆற்றின் ஓரம் இருக்கும் குடிசைகளை அகற்றவும் நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். எஸ்.எம்.நகர் மக்களுக்கு அரசு சார்பில் பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது வெகு தொலைவாக இருப்பதாக தெரிவித்தும் அதற்கு மாறாக வியாசர்பாடி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தெரிவித்து கூவத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.  இந்தப் போராட்டம் குறித்து அறிந்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.