ராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ளது மேலப்பெருங்கரை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அலங்காநூரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பாண்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
சென்ட்ரிங் வேலை செய்து வாய்ந்த பாண்டி குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று. நேற்று மேலப்பெருங்கரை பகுதியில் உள்ள அங்கயற்கண்ணி அம்மன் கோவிலில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமணத்திற்கான உணவுகள், அலங்காரம் என அனைத்தும் நடைபெற்று முடிந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அந்த பகுதியில் திருமணத்திற்கான பேனர்களும் உறவினர்களால் வைக்கப்பட்டது.
பெண் வீட்டார் திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்த நிலையில்,மணமகன் வீட்டார் ஒருவர் கூட வராததால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால் அனைவருடைய செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் பெண் வீட்டார் குழப்பம் அடைந்தனர். உடனடியாக மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது வீடு பூட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பெண் வீட்டார் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதற்கு பின்னர் ஜாதகம் சரியல்லை பொருத்தம் சரியில்லை என சாக்குபோக்கு சொல்லி பாண்டி சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்படி போலீசார் சமரசம் செய்து வைத்தனர். இதனால் திருமணத்திற்கு சம்மதித்த பாண்டி திடீரென இரவோடு இரவாக அவரது வீட்டாரும் காணாமல் போனது பெண் வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.