
சென்னையில் நடைபெற்ற பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முதலில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது குறித்து உருக்கமாக பேசினார்.
அவர், ‘’கஜா புயலால் உயிர்களை இழந்து, வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு அனுதாபம் அல்ல.... நிவாரண உதவி செய்யும் நேரம் இது. அதற்காக என் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றம் மூலமாகவும் நிறைய உதவிகள் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் செய்கிறோம். இது வந்து நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய பேரழிவு. அரசாங்கத்தினால் மட்டும் இதற்கு நிவாரண உதவிகள் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தவறானது. எல்லோரும் சேர்ந்து கைகொடுத்து அவுங்களுக்கு உதவனும் என்று இந்த நேரத்தில இந்த சந்தர்ப்பத்தில பணம் இருக்குறவங்க...நல்ல மனசு இருக்குறவங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்’’என்று தெரிவித்தார்.
