Skip to main content

'சாந்தகுமாருக்கு எய்ட்ஸ் நோய்... பொய் சொல்லி மிரட்டிய ராஜகோபால்..!'

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

உடல் நலக்குறைவால் காலமான சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் பிரேத பரிசோதனை நாளை(19-07-2019) நடக்கிறது. அவர் ஆயுள் தண்டனை கைதி என்பதால், முறைப்படி வருவாய்த்துறை கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்திய பிறகே, பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். இதனால், ராஜகோபாலின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 

 

r

 

இதனிடையே, உச்சநீதி மன்றத்தின் பல்வேறு வழக்குகளின் தீர்ப்பு விவரம், உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜகோபாலின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்ட விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் " ஜீவஜோதியை தன்வசப்படுத்த அவரது திருமணத்திற்கு பிறகும் பரிசு பொருள் வழங்குதல், மருத்துவமனை கட்டணங்களை செலுத்துதல் என வள்ளல் தன்மையோடு ராஜகோபால் நடந்து கொண்டதை நீதிபதிகள் சுட்டிக் காட்டி உள்ளனர். 

 

மேலும், 1-10-2001 அன்று சாந்தகுமாரை கடத்தி ராஜகோபால் மிரட்டியது, அவரை அடியாட்களை வைத்து கொடூரமாக  தாக்கியது, 2 நாளில் மனைவியை விட்டு ஓடிவிட வேண்டும் என கட்டாயப் படுத்தியது. அதுமட்டுமின்றி ஜீவஜோதியிடம், சாந்தகுமாருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருக்கிறது. எனவே, அவரோடு அந்தரங்க விஷயங்களை தொடரக்கூடாது என மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு சாரம்சங்கள் தீர்ப்பின் நகலில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் கீழமை நீதிமன்றம் மிக தெளிவாக விசாரித்து ஆயுள் சிறை விதித்துள்ளது. எனவே, மேல்முறையீட்டை தாங்கள் நிராகரிப்பதாகவும்" நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்