Skip to main content

கீழடியில் ரூபாய் 12.21 கோடியில் அருங்காட்சியகம்- முதல்வர் அறிவிப்பு!

Published on 01/11/2019 | Edited on 02/11/2019

 

கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூபாய் 12.21 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கீழடி அகழாய்வு அருங்காட்சியகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழர்களின் பண்பாடு, தொன்மை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியம அமைக்கப்படும் என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்