Published on 30/01/2020 | Edited on 30/01/2020
தேனி மாவட்டம் TID,483 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒன்றியத்துக்கு தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா தேனியில் என்.ஆர் டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தில் ஓ.ராஜா ஆவின் ஒன்றியத் தலைவராகவும், துணைத் தலைவராக செல்லமுத்து ஆகியோர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

உடன் ஆவின் 21 உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தேனி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.