Skip to main content

சென்னை பல இடங்களில் மழை பொழிவு

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

Rainfall at many places in Chennai

 

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளிலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னையின் வடபழனி, சூளைமேடு, அசோக் நகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி நகர், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர்  உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக மழை பொழிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

‘7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Chance of rain in 7 districts  Meteorological Center

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (28.06.2024) வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை 10  மணி வரை லேசான மழை பெய்யும்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.