Skip to main content

'முதலமைச்சர கூப்பிடுங்க... கரோனாவை காட்ட சொல்லுங்க' போலிசாரிடம் லந்து செய்த இளைஞருக்கு லாடம்!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020
ிப


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். நேற்று இரவில் இருந்து இவர் போலிசாரிடம் அடிவாங்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. என்ன காரணத்திற்காக காவலர்கள் இவரை வெளுக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான கதை. நேற்று மதியம் அந்த கிராமத்தில் காவலர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை தடுத்தி நிறுத்தி எச்சரித்துள்ளார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் தினேஷ் வந்துள்ளார். அவரை மறித்த காவலர்கள் ஏன் வெளியே சுற்றுகிறாய் என்று கேட்டுள்ளார்கள். 



அதற்கு தினேஷ், "நீங்கள் ஏன் வெளியே நிற்கிறீர்கள், உங்களுக்கு கரோனா வராதா? இது ஏன் ஊரு, என்னுடைய கோட்டை. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்" என்றார். அதற்கு பெண் காவலர்கள், முதலைமைச்சர் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல என்று கூறியுள்ளார்கள். அதற்கு தினேஷ், "முதல்ல அவர இங்க வர சொல்லுங்க, ஓட்டு கேட்க மட்டும் வர தெரியுதுல்ல, வந்து கரோனாவ காட்ட சொல்லுங்க" என்று கூறி இருக்கிறார். பொறுத்து பார்த்த காவலர்கள், இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று வெளுத்துள்ளார்கள். ஐயோ! சார் நான் இனிமே அப்படி செய்ய மாட்டேன் என்று அடி பொறுக்க முடியாமல் அவர் கத்தியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

நோட்டமிட்ட கடப்பாரை திருடர்கள்; தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Thieves of Noted Homes;viral cctv

கடலூரில் நள்ளிரவில் கடப்பாரையுடன் மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் கீழமணக்குடி பகுதியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சில நபர்கள் கொள்ளையடிக்க முயற்சிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைப் பிடித்த அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஐந்து பேரையும் உட்கார வைத்திருக்கும் வீடியோ காட்சிகளும், கடப்பாரையுடன் கொள்ளை அடிப்பதற்காக வேவு பார்க்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.