Skip to main content

சென்னையில் பரவலாக மழை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
nn

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர், மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர் மழை; பாதி நிரம்பிய பவானி சாகர்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
continuous rain; Bhavani Sagar is half full

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்வதால் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 936 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 58.93 அடியாக உயர்ந்தது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.96 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.61 அடியாக உயர்ந்துள்ளது.

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rain alert for 10 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், விழுப்புரம், நாமக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.