Published on 05/02/2019 | Edited on 05/02/2019

மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் நீலகிரியில் உறைபனிக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.