Skip to main content

டிவிட்டரில் மக்களிடம் புதிர் கேள்வியை எழுப்பிய தேர்தல் ஆணையம் !

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

தமிழக தேர்தல் ஆணையம் தினமும் மக்களிடையே வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு பகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் CEO (@TNelectionsCEO) தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு "குறுக்கெழுத்து போட்டி" தொடர்பான கேள்வியை மக்களிடம் எழுப்பியது. 

 

election commisssion ceo



அதில் தமிழக தேர்தல் ஆணையத்தின் கேள்வி என்ன? 

இந்திய தேர்தல் ஆணையத்தால் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கினால் மக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் "மொபைல் ஆப்" தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அந்த ஆப்-ன் பெயர் " cVIGIL "தேர்ந்தெடுத்து பெயரை கட்டம் கட்டி மீண்டும் தமிழக தேர்தல் ஆணைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுமாறு டிவிட்டர் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவோரை தமிழக தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. மேலும் ஐந்து நண்பர்களுக்கு இந்த ஆப் பெயரை Tag செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் டிவிட்டரில் தமிழக தேர்தல் ஆணையம் தமிழில் கேள்விகளை எழுப்பினால் இன்னும் அதிகமான மக்கள் கேள்விகள் மற்றும் பதில்களை எளிதில் அறிந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்