புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 31 அஞ்சலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: ‘’புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதார் அட்டைக்கு புதிதாக பதிவு செய்யும் சேவையும் ஏற்கனவே ஆதார் அட்டை பெற்றிருந்தால் அதில் மாற்றம் செய்ய நேர்ந்தால் அதற்கான சேவையும் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 அஞ்சலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் சேவை தேவைப்படும் பொதுமக்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ்க்காணும் அஞ்சலகங்களை அணுகி புதிய ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம் சம்பந்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தபால் நிலையம், அன்னவாசல், அறந்தாங்கி, அரிமளம், அத்தானி, கந்தர்வக்கோட்டை, இலுப்பூ, கறம்பக்குடி, கீரமங்கலம், கீரனூர், கீழாநிலை, கொப்பனாப்பட்டி, கோட்டைப்பட்டிணம், குளத்தூர், மணமேல்குடி, மீமிசல், பெருங்களூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை கிழக்கு (அண்ணாசிலை அருகில்), புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம், புதுக்கோட்டை பொது அலுவலக வளாகம், இராஜகோபாலபுரம், இராமச்சந்திரபுரம், இராயவரம், திருக்கோகா;ணம், திருமயம், திருப்பெருந்துரை, திருவரங்குளம், வயலோகம், விராலிமலை ஆகிய 31 இடங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மேற்கண்ட அஞ்சலகங்களில் வழங்கப்படும் ஆதார் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.