காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஜாக்டோ-ஜியோவினர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் "ஜெய்ஷ்-இ-மொஹம்மத்" தீவிரவாதக் குழுவினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 44 நபர்கள் உயிரிழந்தனர். அதனையொட்டி நாடெங்கும் பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்த வண்ணமுள்ளனர்.
வீரமரணம் அடைந்த மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அமைதி ஊர்வலம் தியாகி ராமச்சந்திரனார் பூங்காவில் தொடங்கி அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது. இறுதியில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், செல்வக்குமார், முத்துச்சாமி, ஜோசப் சேவியர், ரவிச்சந்திரன், முத்துராமன் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.