Published on 14/05/2025 | Edited on 14/05/2025

இரு குழந்தைகளைக் கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மேல கண்டார்கோட்டை என்ற பகுதியில் தம்பதியர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்த தம்பதியருக்குக் கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது 2 குழந்தைகளை இந்த தம்பதியர் கொன்று விட்டு, அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் பொன்மலை காவல் துறையினர் கைப்பற்றி தீவிர முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.