புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ளது மயில்களின் சரணாலயம். இந்தச் சரணாலயத்தில் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் வெளியேறிய மயில்கள் மாவட்டம் முழுவதும் இரைதேடியும், தண்ணீர் தேடியும் சென்றுவிட்டன. இரைதேடி செல்லும் இடங்களில் வேட்டைக்காரர்களால் மயில்கள் கொல்லப்படுவது தொடர் கதையாகியுள்ளது. பல மயில்கள் விபத்துகளில் சிக்கி மடிந்துள்ளது. சமீபத்தில் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் சுருண்டுவிழுந்து செத்து மடியும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அழிஞ்சி கண்மாய் கரையோரம் சீகம்பட்டி விவசாயி காசிநாதன் நெல் விவசாயம் செய்துள்ளார். நெல் கதிர்களையும், பயிர்களையும் எலிகள் கடித்து நாசம் செய்வதைப் பார்த்த விவசாயி எலிகளுக்கு விஷம் கலந்த உணவை வயலில் வைக்க எலிகளுக்குப் பதிலாக அந்தப் பக்கம் இரைதேடி வந்த 13 மயில்கள் திண்று ஆங்காங்கே செத்துக் கிடந்தது. இந்தத் தகவல் அறிந்து அங்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மயில்களின் இறப்புகளுக்கு காரணமாக இருந்ததாக விவசாயி காசிநாதனை கைது செய்துள்ளனர்.