Published on 28/05/2021 | Edited on 28/05/2021
பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டே நாளில் மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் காவல்துறையினர் மற்றும் மற்ற அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என ஒவ்வொருவரையும் புதிய அரசு தற்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் என்பவரை அரசு நியமித்து உத்தரவிட்டது.
ரவிச்சந்திரன் மக்கள் தொடர்பு அதிகாரியாக திருச்சியில் பொறுப்பேற்றுக்கொண்ட இரண்டே நாளில் அவர் பணியிட மாற்றம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.